உலகக்கோப்பை வென்ற கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு சென்னையில் பிரமாண்ட வரவேற்பு!

 
மகளிர் கிரிக்கெட் ஹர்மன்பிரீத் கவுர்

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு சென்னையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

13-வது மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 52 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. 52 ஆண்டுகளாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு கிடைக்காத இந்த வெற்றி, நாட்டெங்கும் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.

மகளிர் கிரிக்கெட் ஹர்மன்பிரீத் கவுர்

இந்த வெற்றியை முன்னிட்டு, சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஹர்மன்பிரீத் கவுருக்கு சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். கேப்டன் கவுர் பள்ளி வந்தபோது, மேளதாளங்கள் முழங்க வரவேற்கப்பட்டார். அவருக்கு பெரிய மாலையணிவித்து, ஆரத்தி எடுத்துப் பாரம்பரிய மரியாதை செலுத்தினர்.

மகளிர் கிரிக்கெட் ஹர்மன்பிரீத் கவுர்

பின்னர், ஹர்மன்பிரீத் கவுர் மாணவர்களுடன் உரையாடி, தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். மாணவிகள் இந்திய வீராங்கனைகளின் ஜெர்சியை அணிந்து, உலகக்கோப்பை வெற்றியை நாடக வடிவில் மீண்டும் வெளிப்படுத்தினர். இது நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் உற்சாகப்படுத்தியது. விழா முழுவதும் இந்திய அணி வெற்றியின் பெருமை மீண்டும் நினைவூட்டும் வகையில் நடைபெற்றது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!