கின்னஸ் சாதனையாளர்... உலகின் நீளமான மூக்குடையவர் காலமானார்!

 
நீளமான மூக்குக்காரர்

உலகின் மிக நீண்ட மூக்கிற்கு சொந்தக்காரர் மேஹ்மெட் ஒயிசர்க். வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு  காரணமாக இவர் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 75 துருக்கியை பூர்வீகமாக கொண்ட மேஹ்மெட்டின் மூக்கின் அளவு 8.8 செ.மீட்டர் நீளத்துக்கு இருந்தது. கின்னஸ் உலக சாதனை அமைப்பு இதனை அங்கீகரித்து, நீளமான மூக்குடையவர் என சான்றிதழ் வழங்கியது.  

உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மேஹ்மெட், அறுவைச் சிகிச்சை செய்ய இருந்த நிலையில், மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு வெவ்வேறு அமைப்புகளில் இருந்து  2010, 2021 ஆண்டுகளில் சாதனை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 

நீளமான மூக்குக்காரர்

தனது நீளமான மூக்கு குறித்து "எனது வாசனை உணர்வு மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது. மற்றவர்களால் அறிய முடியாத வாசனையைக் கூட மிக தொலை தூரத்திலிருந்தே கண்டறிய முடியும். தொடக்கத்தில் மிக நீளமான மூக்கால் பெரும் அவதிப்பட்டேன். அதில் உள்ள சிறப்பம்சங்களால் குறைகளை மறக்க முயன்றேன். இப்போது மிக்க மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணர்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

நீளமான மூக்குக்காரர்

இந்த நீளமான மூக்கு மரபணுவால் வந்திருக்கலாம். ஏற்கனவே எனது குடும்பத்தில் என் தந்தை, மாமாவிடம் நீளமான மூக்குகள் இருந்தன. பள்ளிப் பருவத்தில் இந்த மூக்கால் அதிகம் கிண்டல் செய்யப்படுவேன்.  பிறகு என்னை நானே தேற்றிக் கொண்டேன்.

"கடவுள் என்னை இப்படிப் படைத்தார், இந்த சூழ்நிலையில் எதுவும் செய்ய முடியாது.  என் உடலமைப்புடன் அமைதியாக வாழ கற்றுக் கொண்டேன்." என ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web