உலக முருக பக்தர்கள் மாநாடு... முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்!

 
ஸ்டாலின் சேகர்பாபு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வருகிற ஜூலை மாதத்திற்கு உலக முருக பக்தர்கள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்க உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். உலக முருகர் பக்தர்கள் மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று  பழனியாண்டவர் கலைக் கல்லூரியில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று அதிகாலை பழனிக்கு வருகை தந்தார்.

ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று  பூஜையில் கலந்து கொண்டு தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டார். அதனைத் தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்ற அமைச்சர் சேகர்பாபு, “தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில்  ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுக் கூட்டம்  பிப்ரவரியில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் அறநிலையத் துறைக்கான 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒரு தீர்மானம் தமிழ்க் கடவுளான முருகப் பக்தர்கள் மாநாடு நடத்துவது.

பழனி

அதன்படி உலக முத்தமிழ் முருகபக்தர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மாநாடு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பழனியில் நடைபெறும். தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில்  உலகம் முழுவதும் முருகன் கோவில்களை நிர்மாணித்துள்ள அறங்காவலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அத்துடன்  500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் அழைக்கப்படுவார்கள். வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு உணவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்தும் இலவசமாக வழங்கப்படும். 2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் முருகனை பற்றிய ஆய்வுகள், முருகனின் புகழ் பரப்பும் கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள், இடம்பெறும்.

பழனி

இந்த மாநாட்டை முதல்வர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் ரூ.98 கோடி மதிப்பீட்டில்   நடத்தப்பட்டது. திருச்செந்தூர்,  இதே போல் திருத்தணி, திருப்பரங்குன்றம் கோவில்களிலும் அறநிலையத்துறை சார்பில் திருப்பணிகள் நடக்கிறது. அதே போல் 26 ராமர் கோவில்களில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி மதத்துக்கு எதிரானதல்ல. கடவுளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கோவில்கள் தூய்மையாகவும், சிறப்பாகவும் பராமரிக்கவும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தரும் எனக் கூறினார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web