பிறந்து 4 மாசம் தான் ஆச்சு... 125க்கும் மேற்பட்ட படங்களை அடையாளம் காட்டி உலக சாதனை!
சாதிக்க வயது தடையில்லை, என்ற பழமொழி அடுத்தடுத்து சாதனையாளர்களால் நிரூபிக்கப்பட்டு வருகிறது. பிறந்து வெறும் 4 மாதமே ஆன இந்த சுட்டிக் குழந்தை தனது அபார திறமையால் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. பெங்களூரு பிரஜ்வல்-சினேகா தம்பதியின் மகன் 4 மாதமே ஆன இவான்வி. இந்த குழந்தை பிறந்து 2 மாதம் ஆனபோது தாய் சினேகா விளையாட்டாக 2 படக்காட்சி அட்டையை குழந்தையிடம் காட்டியுள்ளார். குழந்தை கற்பூரம் போல் டக்கென அதை புரிந்து கொண்டு சரியான அடையாளத்தை காட்டியுள்ளது.
குழந்தை இவான்வி தனது நினைவாற்றல் மூலம் வீட்டு பிராணிகள், பழங்கள், பூக்கள், காய்கறிகள், பறவைகள், வாகனங்கள், பல்வேறு நாடுகளில் 10 கொடிகள் என 125க்கும் மேற்பட்டவற்றை படக்காட்சி மூலம் அடையாளம் காட்டுவதில் படுசுட்டியாக இருந்து வருகிறது. தனது குழந்தையின் அபார நினைவாற்றலை கண்டுவியந்த தாய் சினேகா, 125க்கும் மேற்பட்டவற்றின் அடையாளத்தை காட்டுவதை வீடியோவாக பதிவு செய்து நோபல் புக் ஆப் ரெக்கார்ட்சுக்கு அனுப்பி வைத்தார். அதனை அங்கீகரித்து உலக சாதனை புத்தகத்தில் இவான்வி பெயரை சேர்த்து நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தேர்வுத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் மூலம் 4 மாதமே ஆன குழந்தை இவான்வி உலக சாதனை படைத்து பெற்றோருக்கும், பிறந்த ஊருக்கும் பெருமை தேடித் தந்துள்ளது. இதற்கு முன்பு 120 வகையான பொருட்களை அடையாளம் காட்டி ஆந்திராவின் கைவல்யா என்ற 4 மாத குழந்தை சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. கைவல்யாவின் சாதனையை இவான்வி முறியடித்துள்ளார். இவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!