சத்தமில்லாம கடலுக்கடியில் ஓர் உலக சாதனை.. அமெரிக்க பேராசிரியர் அசத்தல்!

 
லார்கோ

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடல் பகுதியான லார்கோவில் 30 அடி ஆழத்தில் ’ஜூல்ஸ் அண்டர்சீ லாட்ஜ்’ என்ற தங்கும் விடுதி அமைந்துள்ளது. இந்த தங்கும் விடுதி சுற்றுலாப் பயணிகளின் பெரும் விருப்பமாக உள்ளது. 

இந்நிலையில், கடந்த மார்ச் 1ஆம் தேதி தெற்கு புளோரிடாவை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியரான ஜோசப் டிதுரி தங்கினார். அதன்பின்னர் அவர் கடல் விடுதியில் இரந்து வெளியே வரவில்லை. தொடர்ந்து 74 நாட்கள் அங்கேயே தங்கியிருந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.  

லார்கோ

கடந்த 2014ஆம் ஆண்டில் இதே இடத்தில் இரண்டு பேராசிரியர்கள் 73 நாட்கள் தங்கியிருந்து உலக சாதனையாக இருந்தது. தற்போது, அந்த சாதனையை பேராசிரியர் டிதுரி முறியடித்துள்ளார். முட்டை மற்றும் சால்மன் போன்ற புரதச்சத்துள்ள உணவை மட்டும் எடுத்து கொண்டு 74 நாட்கள் தங்கியிருந்த டிதுரி, தொடர்ந்து 100 நாட்கள் அங்கேயே தங்கியிருக்கவும் முடிவு செய்துள்ளார். அவர் திட்டமிட்டப்படி 100 நாட்கள் அங்கு தங்கியிருந்தால் பெரும் சாதனையாக அமைவதோடு, அதனை மற்றவர்கள் முறியடிக்க பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web