உலக பல்கலைக்கழக தரவரிசை.. 118 வது இடத்திற்கு முன்னேறிய ஐஐடி பாம்பே!

 
. ஐஐடி பாம்பே

 Quacquarelli Symonds (QS) உலக பல்கலைக்கழக தரவரிசைகளின்படி, MIT மீண்டும் நம்பர். 1 இடத்தைப் பிடித்துள்ளது, அதைத் தொடர்ந்து லண்டன் இம்பீரியல் கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

இந்த ஆண்டு ஐஐடி பாம்பே 149வது இடத்தில் இருந்து 118வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு 149வது இடத்தில் இருந்த ஐஐடி பாம்பே, இந்த ஆண்டு 31 இடங்கள் முன்னேறி 118வது இடத்தைப் பிடித்துள்ளது. ஐஐடி பாம்பே, QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 150 இடங்களுக்குள் நுழைந்தது இதுவே முதல் முறை.

ஐஐடி பாம்பே ஒட்டுமொத்த மதிப்பெண் 56.3 மற்றும் ஐஐடி டெல்லி 56.2 மதிப்பெண்களுடன் 150 வது இடத்தைப் பிடித்துள்ளது. ஐஐஎஸ்சி பெங்களூர், ஐடி காரக்பூர், ஐஐடி மெட்ராஸ், ஐஐடி கான்பூர், ஐஐடி ரூர்க்கி மற்றும் ஐஐடி கவுகாத்தி ஆகியவை முறையே 211, 222, 227, 263, 335 மற்றும் 334 வது இடத்தில் உள்ளன. டெல்லி பல்கலைக்கழகம் 328வது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 383வது இடத்திலும் உள்ளன.

கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி 12வது இடத்தைப் பெற்றுள்ளது மற்றும் 90.1 மதிப்பெண் பெற்றுள்ளது. MIT தொடர்ந்து 13வது ஆண்டாக நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. இம்பீரியல் கல்லூரி நான்கு இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 197 தரவரிசை நிறுவனங்களுடன் அமெரிக்கா அதிக பிரதிநிதித்துவம் பெற்ற நாடு.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web