உலகப்போர் கன்பார்ம்.. அடுத்தடுத்து நடக்க போகும் 10 முக்கிய மாற்றங்கள்.. மக்களே உஷார்!
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் உலகின் மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்கியது. ஈரானின் தாக்குதல் ஒரே இரவில் இஸ்ரேலை உலுக்கியது. சர்வதேச அரசியல் பிரச்சனைகளால், உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது. ஒருபுறம் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் தீவிரமடையப் போகிறது. மற்ற நாடுகள் தலையிடத் தொடங்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. முக்கியமாக ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தலையிட வாய்ப்புள்ளது.
கடந்த சில மாதங்களாக உக்ரைன்-ரஷ்யா, இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் எல்லை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இவை முழுக்க முழுக்க போராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. முழு உலகப் போரின் முதன்மையான ஆபத்து அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா இடையே நேரடி மோதலின் சாத்தியமாகும். இவ்விரு நாடுகளும் நேரடியாகப் போரில் இறங்கினால் அது உலகப் போராக மாறும் என்பது உறுதி. ஆனால் இப்போதைக்கு சீனா நேரடியாக தலையிடவில்லை.
இதனிடையே உலகப் போர் ஆரம்பித்தால்; 10 முக்கிய உலகளாவிய நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்.
1. உலக அளவில் சந்தைகள் சரியும். பல நாடுகளில் சந்தை இரத்தக்களரியாக மாறும். இதன் விளைவாக, பங்குபெறாத நாடுகளில் கூட சந்தை மோசமான விளைவுகளை சந்திக்கும்.
2. இதன் விளைவாக விலை உயரும். பல நாடுகளில், விலைகள் உச்சத்தை எட்டும்.
3. வேலை வாய்ப்பு மோசமாகிவிடும். ஏனெனில் சந்தை மோசமாக சரிந்தால்..50 சதவீதத்திற்கும் கீழ் அது மந்தநிலையை நிச்சயம் உருவாக்கும். அப்படி நடந்தால் நிச்சயம் வேலைவாய்ப்பு குறையும்.
4. புதிய பயங்கரவாத அமைப்புகள், புதிய உலக ஒழுங்கு உருவாகும்.
5. எண்ணெய் விலை உயரும்.
6. இரும்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும்.
7. பயண முறைகள் மாறும். டிக்கெட் விலை உயரும்.
8. உலகப் போர் என்றால் உலகில் வல்லரசாக இருக்கும் பல நாடுகள் மண்ணைக் கவ்வும். அந்த நாடுகளில் உள்ள பிரபல நிறுவனங்களும் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும்.
9. நாடுகளுக்கிடையேயான உறவுகள் மாறும். சில நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்படும் அபாயமும் உள்ளது.
10. சில நாடுகளில் புதிய எல்லைப் பிரச்சனைகள் வரலாம், ஜனாதிபதிகள், பிரதமர்கள் பதவிகளை இழக்கலாம். இப்படி ஒரு உலகப்போர் நடந்தால், பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
இந்த யுத்தம் நடந்தால் நிச்சயமாக யுத்தம் கைமீறி போகும் வாய்ப்புகள் உண்டு. இந்த இரண்டு போர்களும் (இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர்) நேரடியாக சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இடையே மட்டும் அல்ல - இந்தப் போர்கள் ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் போராக மாறப் போகிறது என்பதை நாம் உணர வேண்டும். அவை பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த இரண்டு போர்களும் போரிடும் நாடுகளின் நட்பு நாடுகளிலும் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!