துபாயில் உலகின் முதல் கார்பன்-நியூட்ரல் மசூதி... என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?!

 
துபாய் கார்பன் மசூதி

பிரம்மிக்க வைக்கும் கட்டிட கலை. சுத்தமான பராமரிப்பு, பிரம்மாண்டம் என்று பள்ளிவாசலில் செய்யப்பட்டிருக்கிற வசதிகள் ஆச்சர்யப்படுத்துகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் உலகத்துக்கே முன்னுதாரணமாக, துபாயின் ஹட்டா பகுதியில் உள்ள அல் ரய்யான் பள்ளிவாசல் உலகின் முதல் கார்பன்-நியூட்ரல் பள்ளிவாசல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் யு.எஸ் கிரீன் பில்டிங்ஸ் கவுன்சில் வழங்கும்  LEED Zero Carbon சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்த சாதனை மூலம், பள்ளிவாசல் ஆண்டு முழுவதும் உற்பத்தியாகும் கார்பன் உமிழ்வை 175% அளவுக்கு சமநிலைப்படுத்தியுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மீட்பு முயற்சிகளுக்கே நேரடி பங்களிப்பாக அமைந்துள்ளது.

துபாய் கார்பன் மசூதி

முன்னதாக, 2021ம் ஆண்டு இந்த பள்ளிவாசல் LEED Platinum சான்றிதழையும், 2024ல்  LEED Zero Energy விருதையும் பெற்றது. அதிநவீன சோலார் சக்தி அமைப்பு மூலம் தன்னுடைய மின்சாரத் தேவையின் 150% மின்சாரத்தை உற்பத்தி செய்து கூடுதல் ஆற்றலை மின்வலையமைப்புக்கு வழங்கி வருகிறது.

துபாய் மின் நீர் ஆணையத்தின் (DEWA) தலைமை நிர்வாக அதிகாரி சயீத் முகமது அல் தையர், "ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2050 நெட்-சீரோ இலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தில் இது வரலாற்றுச் சாதனை" எனப் பெருமிதம் தெரிவித்தார். அவர் மேலும், ஹட்டா பகுதி முழுவதும் நிலைத்த நகர வளர்ச்சி இலக்கை அடைய, சுற்றுச்சூழல் பாதுகாப்பும் தொழில்நுட்ப மேம்பாடுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.

துபாய் கடற்கரை

சுமார் 1,050 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பள்ளிவாசல், 600க்கும் மேற்பட்ட பயணிகளை அமர்த்தும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. சோலார் மின்சாரம், மழைநீர் சுத்திகரிப்பு, மின்சார வாகன சார்ஜிங் வசதி, உயர்தர காற்று சுத்திகரிப்பு அமைப்பு, மறுசுழற்சி செய்யப்பட்ட கட்டமைப்பு பொருட்கள் உள்ளிட்டவை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

உலகளாவிய அளவில் மதத்தளங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னெடுப்பு எடுக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வரலாற்று அடையாளமாக இந்த பள்ளிவாசல் கண்ணியமான பதிவை ஏற்படுத்தியுள்ளது. சுத்தமான ஆற்றல், பசுமை கட்டிடக் கொள்கைகள் ஆகியவற்றில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எட்டிய புதியத்திறன் இச்சாதனையால் மேலும் வலுவடைந்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!