ரைத்தாவில் புழு .. பிரபல ஹோட்டலுக்கு அபராதம்.. வாட்ஸ் அப்பில் புகார் அளிக்க அதிகாரிகள் கோரிக்கை!

 
ரைத்தாவில் புழு

சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ்குமார். நேற்று முன்தினம், அமைந்தகரையில் உள்ள பிரபல உணவகத்தில் மட்டன், சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து, வீட்டில் தனது  மனைவி மற்றும் குழந்தைகளுடன் சாப்பிட்டுள்ளார். அப்போது வெங்காய ரைதாவை பிரித்து பார்த்தபோது புழுக்கள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது, ​​"தெரியாமல் தவறு நடந்துள்ளது.

அதனால், வேறு பிரியாணி தருகிறேன்' என்றனர். இதற்கிடையில், புழுக்களின் வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில் அந்த உணவகத்தில் சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராமராஜ் தலைமையிலான குழுவினர் இன்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.சோதனைக்காக சிக்கன், மட்டன் பிரியாணி, வெங்காய ரைத்தா எடுத்துச் சென்றனர். குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பால், தயிர் உட்பட ஓட்டல் முழுவதும் ஆய்வு செய்தனர். 5 ஆயிரம் ரூபாய் அபராதம் ஓட்டல் நிர்வாகத்துக்கு விதிக்கப்பட்டது.

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ''உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கினால், உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.  புகாரளிக்க வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பினால் போதும், பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும். நீங்கள் ஒரு சமூக ஊடக தளத்தின் மூலம் ஒரு வீடியோவை பதிவுடுகிறீர்கள். அதை கண்டுபிடிப்பது எப்படி? எனவே, வாடிக்கையாளர்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் நேரிடையாக புகார் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web