அதிர்ச்சி வீடியோ... தக்காளி சாஸில் நெளிந்த புழுக்கள் ... பிரபல நடிகர் பரபரப்பு புகார்!
குன்னூரில் #180•M clver villa 180 என்ற பிரபல உணவு விடுதியில் தக்காளி சாஸில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து நிர்வாகத்திடம் முறையிட்டும் அலட்சியமாக பதில் @CMOTamilnadu @foodsafetygov @CommissionerHR @PoliceTamilnadu @tnfoodsafety @OrganicConsumer @WFP @DCsofIndia pic.twitter.com/mtZDili0w4
— Vijay Vishwa (@VijayVishwaOffi) April 28, 2024
இதுகுறித்து விஜய் விஷ்வா வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது, “நாங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஊட்டிக்கு வந்திருந்தோம். அங்கு சாப்பிடுவதற்காக தனியார் ஹோட்டலுக்கு வந்தோம். இந்த ஹோட்டலில் ஒரு நாளைக்கு தங்குவதற்கு ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் என்று கூறினார்கள். எங்களுக்கு அருகில் எந்த ஹோட்டலும் இல்லாத நிலையில், நாங்கள் இங்கு வந்தோம்.
இதனையடுத்து, இங்கு நாங்கள் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டோம். அப்பொழுது, இங்கு வைக்கப்பட்டிருந்த தக்காளி சாஸில் கெட்டுப்போன வாசனை வந்தது. இதனால், அவற்றை திறந்து பார்த்த நிலையில் அதில் புழுக்கள் இருந்தது. இதனால், ஹோட்டல் ஊழியர்களிடம் இது குறித்து புகார் அளித்தோம். அதற்கு அவர்கள், ‘நாங்கள் என்ன செய்வது நீங்கள் மேனேஜரிடம் பேசுங்கள்’ என்றனர்.

குன்னூரில் #180•M clver villa 180 என்ற பிரபல உணவு விடுதியில் தக்காளி சாஸில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து நிர்வாகத்திடம் முறையிட்டும் அலட்சியமாக பதில் அளித்தனர்ஹோட்டல் ஊழியர்கள் மிகுந்த அலட்சியத்துடன் பேசுகின்றனர். நாங்கள் அந்த உணவினை சாப்பிட்டதால் எங்களுக்கு வாந்தி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாத நிலை உருவாகியுள்ளது. எனவே, நீங்கள் ஹோட்டலுக்குச் சென்றால் கவனமாக இருங்கள்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து, அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
