வாவ்.. வேற லெவல்.. ரூ.5.82 லட்சத்துக்கு விற்பனையான 2 வயது சிறுவனின் ஓவியம்!

 
லாரண்ட் ஸ்வார்ஸ்

இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை தங்கள் திறமைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உலகம் முழுவதும் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் லாரண்ட் ஸ்வார்ஸ் (Laurent Schwarz) என்ற 2 வயது சிறுவன் சிறுவயதிலிருந்தே வரைவதில் அபார திறமை பெற்றுள்ளார். இதை கவனித்த அவனது பெற்றோர், சிறுவன் ஓவியம் வரைவதற்கு தனி ஸ்டுடியோவை கட்டி கொடுத்தனர்.

குதிரைகள், டைனோசர்கள் என பல வகையான ஓவியங்களை அற்புதமாக வரைந்துள்ளார் சிறுவன். இந்நிலையில், தனது மகனின் அற்புதமான ஓவியத் திறமையைப் பார்த்த அவரது தாய் லிசா, இன்ஸ்டாகிராமில் தனிப் பக்கத்தை உருவாக்கி தனது மகனின் ஓவியங்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் முனிச்சில் நடைபெற்ற கண்காட்சியில் சிறுவனின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

சிறுவன் வரைந்த ஓவியம் சுமார் $7,000க்கு விற்கப்பட்டது. அதன்படி இந்திய மதிப்பில் 5.82 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web