வாவ்... ஓடும் காரை தாண்டி குதித்த இளைஞர்... வியக்கத்தக்க வீடியோ!

 
கார்


 இன்றைய வாழ்க்கை முறையில் இளசுகள் பலரும் தங்களின் சாகங்களை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இவை சில நேரங்களில் ஆபத்துக்களை ஏற்படுத்தி விடுகின்றன. இதற்காக பலரும் யூடியூப் சான்கல்களை உருவாக்கி அதன் மூலம் வீடியோக்களை பதிவிட்டு லைக்ஸ்களுக்காக காத்திருக்கின்றனர்.  

அந்த வகையில் ஸ்ட்ரீமர் என்ற இளைஞர்  ‘ஐ ஷோ ஸ்பீடு’ என்ற பெயரில் யூடியூபில் பிரபலமானார். 19 வயதான இந்த இளைஞர்  தன்னுடைய சேனலில் பலவிதமான சவால்கள் செய்து அதை வீடியோவாக யூடியூபில் பதிவிட்டு வருகின்றனர். இவருக்கு லட்சக்கணக்கில் ஃபாலோயர்ஸ்கள் இருக்கின்றனர்.  இந்நிலையில் தற்போது அவர் செய்த ஒரு சாகசம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அதாவது ஸ்ட்மரின் தந்தை ஒரு சொகுசு காரை வேகமாக ஓட்டி வரும் நிலையில் ஸ்ட்ரிமர் அதை தாவி குதித்து அசால்ட்டாக நிற்கிறார்.

அத்துடன்  “உலகிலேயே இந்த சாகசத்தை செய்த முதல் நபர் நான் தான்” லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க” என தனது தந்தையுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதன்பின் அதனை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். உலகம் முழுவதும் இந்தப் பதிவு 2 நாட்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவிற்கு 4 கோடி பேர் லைக் செய்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி