வயிற்றில் துணியை சுற்றிக்கொண்டு பலே மோசடி.. திருப்பூர் பேருந்து நிலையத்தை அதிர வைக்கும் பெண்கள்!
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் மோசடி செய்பவர்கள் அதிகரித்துள்ள நிலையில், பெண்கள் வயிற்றில் துணியை கட்டிக்கொண்டு கர்ப்பமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் முறைகேடு நடப்பதாக பல புகார்கள் வரும் நிலையில், பொதுமக்களிடம் பணம் பறிப்பதற்காக பல வழிகளில் மோசடி செய்பவர்கள் ஏமாற்றி வருகின்றனர். அவர்களில் ஒருவர் கர்ப்பமாக இருப்பது போல் வயிற்றில் துணி கட்டிக்கொண்டு பிச்சை எடுப்பது, பணம் தொலைந்துவிட்டதாக பிச்சை எடுப்பது போல் ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், பேருந்து நிலைய எஸ்கலேட்டர் பகுதியில் 2 பெண்கள் வயிற்றில் துணியை சுற்றிக் கொண்டிருப்பதை பார்த்த பொதுமக்கள் சிலர், அங்கிருந்த பெண் ஒருவர் வயிற்றில் கட்டியிருந்த துணியை கழற்றும் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதுமட்டுமின்றி திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பல வழிகளில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிலை உள்ளது, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும், காவல் துறையினர் இதுபோன்ற பணம் பறிக்கும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!