மக்களே.. உஷார்... ஜெராக்ஸ் கடைகளில் இப்படியெல்லாம் கூட நடக்குது... மோசடி கும்பலின் டிஜிட்டல் குற்றங்கள்!

 
டிஜிட்டல்

டிஜிட்டல் இந்தியாவில் மோசடிகளும் டிஜிட்டல் வடிவத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மோசடியில் இருந்து படித்தவர்கள், படிக்காதவர்கள் என யாரும் தப்புவது இல்லை. அதோடு இது காவல்துறைக்கும் பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

அதாவது, சைபர் கிரிமினல்களால் பாதிக்கப்படும் அப்பாவிகள் அதிகரித்து வர, இந்த ஆன்லைன் குற்றங்களால் போலீசாருக்கு பணி கூடுதல் சுமையாகியுள்ளது. இதனால் ஆன்லைன் மோசடி கும்பல்களை பிடிக்க மத்திய, மாநில அரசுகள் தனி அமைப்பை உருவாக்கியுள்ளது என்றே கூறலாம்.

டிஜிட்டல்

அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஆன்லைன் மோசடி கும்பலை போலீசார் வளைத்தனர், அவர்களிடம் 2,197 சிம் கார்டுகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதிலும் ஒரே நபர் தன்னுடைய புகைப்படத்தை, அப்பாவிகள் பலரது ஆவணங்களில் பயன்படுத்தி 685 சிம் கார்டுகளை உபயோகித்து வந்திருக்கிறார்.

ஜெராக்ஸ் கடை போன்ற பொது இடங்களில் கிடைக்கும் பலரது ஆவணங்களில் பெயர் திருத்தம் செய்து, தனக்கான சிம் கார்டுகளை அந்த நபர் பெற்றுள்ளார். இப்படி சேகரித்த சிம் கார்டுகளை, தங்களது மோசடி கால் சென்டர் செயல்பாட்டுக்கும், அதன் மூலம் நாடு நெடுக டிஜிட்டல் முறைகேடுகளையும் நடத்தி இருக்கிறார்கள்.

டிஜிட்டல்

மத்திய தொலைத்தொடர்பு துறை உதவியுடன் மும்பை சைபர் க்ரைம் போலீஸார் மேற்கொண்ட வேட்டையில், மலபார் ஹில்ஸ் பகுதியிலிருந்து செயல்பட்டு வந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சிம் கார்டுகள் மட்டுமன்றி, ஏராளமான செல்போன், லேப்டாப், அப்பாவிகள் பலரது ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மும்பை காவல்துறை ஆணையர் நியமித்துள்ள சிறப்பு காவல் படையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web