அட... அச்சு அசல் ரஜினியை போல நகல் .... வைரல் வீடியோ!!

தமிழ் திரையுலகில் உச்சநடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் படத்திற்காக மட்டுமே மேக்கப் போடுவார். மற்றபடி பொது நிகழ்ச்சிகள், வெளியில் வரும் போது மேக்கப் எதுவும் இல்லாமல் அதே வழுக்கை தலை, தாடியுடன் தான் வருவது வழக்கம். அவரது இந்த எளிமை தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரஜினியின் ரசிகர்களில் பலர் ரஜினி போலவே கேசத்தில் சாயம் பூசாது, எளிமையான தோற்றத்தில் வலம் வருவதை பேஷனாக்கி வருகின்றனர்.
WOW.. #Rajinikanth look alike? 😲🫨😱pic.twitter.com/g9rCLDaQuV
— VCD (@VCDtweets) October 19, 2023
அப்படி சுற்றித்திரியும் ஒருவரது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அச்சு அசலாக ரஜினிகாந்த் தோற்றத்தில் தென்படும் அந்த நபர், ரஜினியைவிட சற்று உருவிவிட்ட உடல்வாகும், சாயம் பூசாத தாடியும், அதே போன்ற கண்ணாடியுமாக இருக்கிறார். ரஜினி போலவே அவ்வப்போது தலையில் மிச்சமிருக்கும் கேசத்தை கோதிவிடுகிறார்.
இவர் சாதாரணை எளிமையான சட்டை, கால்சட்டை, சாதாரண காலணியும் அணிந்துள்ளார். இவரை திடீரென பார்ப்பவர்கள் ரஜினி தான் இங்கே நிற்கிறாரோ என நினைத்து ஒரு நிமிடம் நின்று பார்த்து விட்டு செல்கின்றனர். சிலர் அந்த ஜெராக்ஸ் ரஜினியை விசாரிப்பதும், கைகுலுக்குவதுமாக செல்கின்றனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!