கோடையில் சில்லுன்னு ஒரு மழை... தமிழகத்துக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட்!

 
மஞ்சள் அலர்ட்

 தமிழகத்தில் மார்ச் மாத தொடக்கம் முதலே வெயில் கொளுத்தி வருகிறது. கத்திரி வெயிலால் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்த நிலையில் கோடை மழை மக்களை குளிர்வித்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில்  கடந்த சில நாட்களாக  பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மே16ம் தேதி வரை மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

வெயில் , மழை

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று முதல் மே 16ம் தேதி  வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியாவின் சில மாநிலங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  ஒடிசாவின் சில பகுதிகள், கேரளா, மாஹே, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் உள் கர்நாடகாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும்  தமிழகம்,  புதுச்சேரி காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web