மஞ்சள் அலர்ட்... பத்திரம் மக்களே... இன்று இந்த 18 மாவட்டங்களில் 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்!

 
மஞ்சள் அலெர்ட்
 

இன்று தமிழகத்தின் 18 மாவட்டங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி வரை  கூடுதலாக வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.இன்னும் ஏப்ரல் மாதமே முழுசா முடியலை.. அதற்குள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெப்ப காற்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 

வெப்ப அலை
பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் விளைவாகவும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கத்தரி வெயில்  துவங்குவதற்கு முன்பே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 109 டிகிரி வரை வெயில் மக்களை பெரிதும் துன்பப்படுத்தியது. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், இன்று தமிழகத்தின் 18 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இயல்பைவிட 5 டிகிரி வரை மேலும் அதிகரிக்கும் என்று மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.  


காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,  நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொம்பவே பாதுகாப்பாக இருங்க மக்களே... குழந்தைகளையும், வயதானவர்களையும் வெளியே தனியே அனுப்பாதீங்க. வெயில் காலங்களில் தேவையான தண்ணீர் அருந்த குழந்தைகளையும் பழக்கப்படுத்துங்க. பருத்தியினால் ஆன உடைகளை அணியுங்க.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web