தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை.... குடையோடு கிளம்புங்க!

 
மஞ்சள் அலர்ட்

 தமிழகத்தில் மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில வாரங்களாக பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மழை

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  தமிழகத்தில் இன்று தரைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 40 கி.மீ. வேகத் தரைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெயில் மழை

அருணாச்சல பிரதேசம் , அஸ்ஸாம் , மேகாலயா மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் , இமாச்சல பிரதேசம் , சிக்கிம் , பீகார் மாநிலங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web