நேற்று ஒரே நாளில் 4,00,000 பேர் பயணம்... சென்னை மெட்ரோ புது சாதனை!
நேற்று சென்னை மெரினாவில் வான்வெளி சாகச நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசிக்க 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கூடியிருந்த நிலையில், 5 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்ப முறையான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று கூறப்படும் நிலையில், நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாகவும், இது தான் அதிகளவில் ஒரே நாளில் பயணம் செய்த எண்ணிக்கையாக சாதனைப் படைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் 1.7 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வார்கள். நேற்று மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை காண வந்தவர்கள் மெட்ரோ ரயில் பயணம் செய்தனர்.
இதுவரை ஒரே நாளில் 3,74,087 பேர் பயணம் செய்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில் அச்சாதனை நேற்று முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
