யோவ்... என்னய்யா கேள்வி கேட்குற... பதறிய நேரு... கூலான உதயநிதி!

 
உதயநிதி

பத்திரிக்கையாளர் சந்திப்பில், அந்த கேள்வியை யாருமே எதிர்பார்க்கவில்லை. நாலாபுறமும், தொடர்ந்து 8வது நாளாக ரெய்டு நடந்து கொண்டிருக்கும் போது, பாஜகவுடன் கூட்டணியா? என்கிற கேள்வியை முன் வைத்தால், யார் தான் பதற மாட்டார்கள். திருச்சியில் அரங்கேறியது அது தான். முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட திமுக சார்பில், 'எங்கள் முதல்வர்... எங்கள் பெருமை' என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலிலின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி திருச்சி ஜோசப் கல்லுாரி வளாகத்தில் நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று கண்காட்சியை அமைச்சர் உதயநிதி பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய பொழுது, "காங்கிரஸ் கொண்டு வந்த மிசாவுக்கும், இப்போது நடைபெறும் பாஜகவின் வருமான வரி சோதனைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எந்த சவாலையும் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.

உதயநிதி

பாஜகவுடன் கூட்டணியா? என்று கூட்டத்தில் இருந்த நிருபர் ஒருவர் கொளுத்திப் போட, ஏய்... என்னய்யா கேள்வி கேட்குற என்று பக்கத்தில் அமர்ந்திருந்த அமைச்சர் நேரு டென்ஷனானார். பரவாயில்லைன்னா விடுங்க என்று கூலாக பேச ஆரம்பித்த உதயநிதி, பத்திரிக்கையாளர்கள் தான் அப்படி நினைக்கிறீர்கள். நாங்கள் அப்படி நினைக்கவில்லை என்றவர், சட்டசபையில் விளையாட்டுத் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்" என்றார். 

"நீங்கள் துணை முதல்வராவீர்கள்' என சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறதே'' என நிருபர்கள் கேட்ட போது, "நீங்கள் தானே சமூக வலைதளம்," என்று கூறியவாறு சிரித்தப்படியே பேட்டியை சட்டென முடித்துக் கொண்டார்.

உதயநிதி

நிருபர்களில் எவராவது ஜி ஸ்கொயர் பற்றி கேள்வி கேட்டு விடுவார்களோ என எண்ணி இளைஞரணியினர் முகத்தில் பீதி காணப்பட்டது தனிக்கதை! அப்படி கேட்டுற கூடாதுன்னு தானே.. ஆரம்பத்திலேயே அமைச்சர், ‘என்னய்யா கேள்வி கேட்குற’ என்று குரல் கொடுத்தாரு...’ என்று நமட்டு சிரிப்பு சிரித்தப்படியே கலைந்தார்கள் நிருபர்கள்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web