மாணவர்கள் மே 15ம் தேதி முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்... தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு!

 
மாணவிகள்

நேற்று தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் மறுகூட்டலுக்கு வரும் மே 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 91.55%  சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95% அதிகமாக உள்ளது.  

மாணவிகள்
தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை அரியலூர்  மாவட்டம்   97.31%  தேர்ச்சி விகிதம் பெற்று  முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், ஐடிஐ படிப்புகளுக்காக ஆன்லைனில் மூலமாக நேற்று முதலே விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மாணவிகள்

அதே சமயம், 10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜூலை 2ம் தேதி முதல் துணைத்தேர்வு நடத்தப்படும். அதே போன்று 10ம் வகுப்பு மறு கூட்டலுக்கு மே 15 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. விடைத்தாள் நகல்களைப் பெறவும் மே 15 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web