குட் நியூஸ்... ஸ்மார்ட் கார்டு இல்லாமலேயே ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கலாம்!

 
ரேஷன்

 இந்தியா முழுவதும் ரேஷன் கார்டுகள் மூலம் மானிய விலையில் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.ரேஷன் கார்டுகள் மூலமாக பொதுமக்கள் மிகுந்த பயன் பெற்று வருகின்றனர்.   சில தகுதி இல்லாத நபர்களும் ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் பெறுவது தெரிய வந்ததால் இகேஒய்சி அப்டேட்டை முடிக்குமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது.

ரேஷன்

இதன் மூலம் தகுதியில்லாத ரேஷன் அட்டைதாரர்கள் இனம் காணப்பட்டு அவர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு ஸ்மார்ட் கார்டு அவசியம்.   ஸ்மார்ட் கார்டுகள் மூலம் இந்தியாவின் எந்த  மூலையில் இருக்கும்  ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்த வசதி புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது.  அந்த வகையில் தற்போது மத்திய அரசு ரேஷன் கார்டு இல்லாமலேயே ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது.  இதற்காக RATION 2.0 என்ற செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ரேஷன்

இந்த செயலியை அங்கீகரிக்கப்பட்ட மொபைல் போனில் டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் ஆதார் அட்டை நம்பரை உள்ளீடு செய்தால் ஓடிபி கேட்கும். பின்னர் அந்த ஓடிபி நம்பரை கொடுத்தால் உங்களுடைய ‌ ஸ்மார்ட் ரேஷன் கார்டு அதில் காட்டும். இதை ரேஷன் கடைகளில் காண்பித்து பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். பேரிடர் போன்ற காலங்களில் ரேஷன் அட்டைகள் தொலைந்து விட்டால் பொதுமக்கள் இந்த செயலியை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web