ஜூன்20 ம் தேதி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்!!

 
தேர்வு
தமிழகத்தில்  10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மே 8ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கான  பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.  இதில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். அதன்படி  தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் தேர்வுக்கு வருகை தராத மாணவர்களுக்கு  அந்ததந்த பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   அதன்படி 10 மற்றும் 12-ம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்டை  ஜூன்20ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 தேர்வு

தேர்வு முடிவுகளை பொறுத்தவரை விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது.மொத்தமாக    94.03 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில்  மாணவர்கள் 91.45 %, மாணவிகள் 96.38 % தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  வழக்கம் போல்  மாணவர்களை விட மாணவிகள் 4.93% தேர்ச்சி.  விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்வு
அதில் தமிழகம் முழுவதும் 326 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன. பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு ஜூன் 19ம்  தேதி துணைத்தேர்வு தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  தோல்வி அடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்து அதில் தேர்வு எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத 47,934 பேர் விண்ணப்பித்து துணைத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web