ரூ.15க்கு பெட்ரோல் கிடைக்கும்... காதுல பூவை சொருகும் நிதின் கட்காரி!

 
நிதின்

ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கரில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசிய பொழுது கூட்டத்தில் இருந்தவர்கள் காமெடி என கலைந்து சென்ற கதை நடந்திருக்கிறது.

மக்களுக்கு உணவு அளிக்கும் தெய்வமாக விவசாயிகள் உள்ளனர் அவர்கள் வேளாண்மை விளை ருட்கள் மட்டுமின்றி, எத்தனால், சூரியசக்தி மின்சாரம் ஆகியவற்றை உற்பத்தி செய்பவர்களாகவும் உள்ளனர். 

பெட்ரோல்

அனைத்து வாகனங்களும் இனி விவசாயிகள் உற்பத்தி செய்யும் எத்தனாலில் இயங்கும். இதனால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் இறக்குமதி செலவு பெரிதும் குறையும். விவசாயிகளும் பயன்பெறுவர். நாட்டில், சராசரியாக 60 சதவிகித எத்தனால் மற்றும் 40 சதவிகித மின்சாரம் வாகனங்கள் இயக்கப்பட்டால், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 15க்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது காற்று மாசும் குறையும். எண்ணை இறக்குமதிக்கு செலவிடப்படும் 16 லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும் இந்த தொகை விவசாயிகளின் வீடுகளுக்கு செல்லும் அவர்களின் வாழ்க்கை தரம் உயரும்.

பெட்ரோல் டீசல்

வாகனத் துறையின் தற்போதைய வருவாய், ரூபாய் 755 லட்சம் கோடி நான்கரை கோடி பேருக்கு இந்தத் துறை வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. இந்த துறையிலிருந்து தான், ஜிஎஸ்டி வசூல் அதிகமாக உள்ளது இந்த துறை மூலமாக கிடைக்கும் ஜிஎஸ்டி வசூலை ரூபாய் 15 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். வாகனங்கள் உற்பத்தியில் கச்சா அமெரிக்கா, சீனாவுக்கு அடுத் தபடியாக 3வது இடத்தில் இந்தியா உள்ளது இவ்வாறு அவர் பேசினார் கூட்டத்தில் இருந்தவர்கள் தேர்தல் வரப்பொகுது என்னமா கம்பி கட்டுற கதையை எல்லாம் எடுத்துவிடுறாரு எனக்கூறிச்சென்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web