தொடரும் சாதீ..ய வன்முறைகள்... உங்களுக்கு எப்பவுமே முடிவெட்ட முடியாது... சலூன் கடைக்காரர் ஆவேசம்!
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீரைப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் யோகேஷ்வரன். இவர் யோகஷ் என்ற பெயரில் முடிவெட்டும் கடை நடத்தி வருகிறார்.
இந்தக் கடையில் யோகேஸ்வரன், மற்றும் இவரது தந்தை கருப்பன் (எ) சின்னையன் இருவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்தக் கடைக்கு மே 11ம் தேதி நேற்று முன்தினம் கெளாப்பாறை அம்பேத்கர் நகரில் வசித்து வரும் பட்டியலின இளைஞர் சஞ்சய் முடி திருத்தம் செய்ய வந்தார். முடிவெட்டுவதற்கு முன் சஞ்சயிடம் யோகேஸ்வரன் நீ எந்த ஊரு என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அந்த இளைஞர் தான் கெளாப்பாறை என்ற தெரிவித்துள்ளார். கடையின் உரிமையாளர் யோகேஸ்வரன், உங்களுக்கு முடி வெட்ட முடியாது, நீ வேறு எங்கேயாவது வெட்டிக்கொள் என திருப்பி அனுப்பிவிட்டார்.
சஞ்சய் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த தனது நண்பர்களிடம் இதனைக் கூறி அனைவரும் ஒன்றுகூடி மீண்டும் முடிவெட்டும் கடைக்கு சென்றனர். கும்பலாக அங்கே சென்று எதுக்காக எனக்கு முடி வெட்ட முடியாது எனக் கூறினீர்கள்? எனக் கேட்டுள்ளனர். குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் இடத்தை கூறி அங்க இருக்கிறவங்களுக்கு எல்லாம் எங்களால் முடி வெட்ட முடியாது அவ்வளவுதான் என்று சொல்லி வேறு ஒருவருக்கு முடிவெட்டத் தொடங்கினார். சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த யோகேஸ்வரன் தந்தை கருப்பனிடமும் இளைஞர்கள் காரணத்தை கேட்டிருக்கிறார்கள். அப்போது உங்களுக்கு நாங்கள் காலம் காலமாக முடி வெட்டுவதில்லை தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போது மட்டுமல்ல உங்க சாதியினருக்கு எப்போதும் முடி வெட்ட முடியாது. நீங்க எங்கு சென்று புகார் செய்தாலும் அதை பற்றி கவலை இல்லை எனத் தெரிவித்துவிட்டார். இளைஞர்கள் கருப்பனை பார்த்து சமூக நீதி பேசக்கூடிய திமுகவில் இருந்து கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாமா? பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் உட்பட அனைத்து தலைவர்களும் சொல்லிக் கொடுத்தனரா எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு அப்பகுதியில் ஏற்பட்டது. அத்துடன் நில்லாமல் இளைஞர்கள் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து முடிதிருத்தும் கடை உரிமையாளர் யோகேஸ்வரன், மற்றும் இவரது தந்தை கருப்பன் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பட்டியல் சமூக இளைஞருக்கு முடி திருத்தம் செய்ய மறுத்ததால், யோகேஸ்வரன் மற்றும் தந்தை கருப்பன் இருவரையும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.இதே பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பட்டியல் சமூக பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தண்ணீர் கொடுத்ததும், மாட்டிறைச்சியை பேருந்தில் எடுத்து வர தடை விதித்ததும் என இதேமாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!