ரூ.2,000 நோட்டு கொடுத்து டாஸ்மாக்ல சரக்கு வாங்கிக்கலாம்... அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

 
டாஸ்மாக்

வரும் செப்டம்பர் 30ம் தேதியுடன் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும். அதன் பின்னர் ரூ.2000 நோட்டுக்கள் செல்லாது என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டாஸ்மாக் நிர்வாகம், ரூ.2,000 நோட்டுக்களை வாங்க வேண்டாம் என்று டாஸ்மாக் கடைகளுக்கு உத்தரவிட்டிருந்ததாக நேற்று இரவு செய்தி வலம் வந்தது. இந்நிலையில், அப்படியான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று விளக்கம் அளித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுக்கள் வாங்கப்பட மாட்டாது என்று வெளியானது தவறான தகவல் என்பதனையும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்காக 2000 கோடி ரூபாய் ! பிரதமர் அலுவலகம் அறிவிப்பு!

வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 நோட்டுக்களைத் தர வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்த நிலையில், ரூ.2000 ரூபாய் தாள்கள் திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்பை நேற்று வெளியிட்டது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற நிலை வந்துள்ளது.

இதனிடையே, டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க வேண்டாம் என்று ஊழியர்களுக்கு டாஸ்மாக் சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியானது. தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2 ஆயிரம் ரூபாய் தாள்கள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. எனவேடாஸ்மாக்கிற்கு மதுபானம் வாங்க வருபவர்களிடம் ரூ. 2 ஆயிரம் ரூபாய் தாள்களை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.

Senthil

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வாங்க தடை இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். ரூ. 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாங்கக் கூடாது என எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! வீடியோ!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web