இனி வங்கிக்கே போக வேண்டியதில்லை... ஆன்லைன் வங்கி சேவைகளில் அடுத்த அதிரடி!

 
வங்கி எஸ்பிஐ மொபைல் பேங்க்

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ  வங்கி தொடர்பான பல வகையான சேவைகளை ஆன்லைன் மூலமாக செய்து வருகின்ற சூழ்நிலையில், வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் குறைந்துள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைமுறைக்கு எளிதான பின்னர் கால விரயமும் குறைந்துள்ளது. தற்போது பல வகையான வங்கி பரிவர்த்தனை சம்பந்தமான வேலைகளும் எளிதாகி விட்டன. 

இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.  இனி வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கு அறிக்கைக்காக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. வங்கி இந்த சேவையை முழுவதுமாக ஆன்லைனில் கொடுக்க துவங்கியுள்ளது. இனி உங்கள் கணக்கு அறிக்கை தேவைப்பட்டால், அதை வீட்டில் உட்கார்ந்து கொண்டே நீங்கள் எளிதில் பெறலாம். இதற்காக, வங்கி சில எண்களை வழங்கியுள்ளது. அதில் உங்கள் அழைப்பு மற்றும் கோரிக்கையை பதிவு செய்ய வேண்டும். கணக்கு அறிக்கைத் தொடர்பான உங்கள் கோரிக்கையை வைத்தவுடன் கணக்கு அறிக்கை உங்கள் மொபைல் ஃபோனுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

வங்கி எஸ்பிஐ மொபைல் பேங்க்

வீட்டில் அமர்ந்தபடியே தொலைபேசியில் உங்கள் வங்கி கணக்கு அறிக்கையைப் பெற, நீங்கள் SBI தொடர்பு மையத்தை அழைக்க வேண்டும். இதற்கான கட்டணமில்லா எண்களை வங்கி வெளியிட்டுள்ளது. 1800 1234 அல்லது 1800 2100 என்ற எந்த கட்டணமில்லா எண்களுக்கும் நீங்கள் அழைக்கலாம். அழைப்பு செய்த பிறகு, கணக்கு இருப்பு மற்றும் பரிவர்த்தனை விவரங்களைப்  பெற 1ஐ அழுத்த வேண்டும். இதன்பிறகு, உங்கள் வங்கிக் கணக்கு எண்ணின் கடைசி 4 இலக்கங்களை உள்ளிடவும்.

வங்கி எஸ்பிஐ மொபைல் பேங்க்

அடுத்த கட்டத்தில், கணக்கு அறிக்கையைப் பெற நீங்கள் எண் 2 யை அழுத்த வேண்டும், அதன் பிறகு அறிக்கை காலம் அதாவது எந்த தேதி முதல் எந்த தேதி வரை என்பதை தேர்ந்தெடுக்கும்படி கேட்கப்படுவீர்கள். அறிக்கையின் காலத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தவுடன், அது உங்கள் மின்னஞ்சல் ஐடிக்கு வங்கி மூலம் அனுப்பப்படும்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web