ஸ்..அப்பா முடியல... சுட்டெரிக்குது சூரியன்... நடுரோட்டில் குளியல்போட்ட இளம்பெண்.. வைரலாகும் வீடியோ!

தமிழகத்தில் இந்தாண்டு கோடை வெயில் கொளுத்தி மக்களை வாட்டி வதக்கி வருகிறது. இதனால் சென்னை போன்ற நகரங்களில் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைந் துவிட்டது. வெப்பம் காரணமாக அனல் காற்று வீசுவதால் வீடுகளில் இருப்பவர்களும் சிரமமடைந்து வருகின்றனர்.
இதனால் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றன. அதே நேரம் எப்படிடா டிரொண்டாகலாம் என நினைப்பவர்கள், இந்த கோடை வெயிலையும் பயன்படுத்தியுள்ளனர். இதற்காக சிலர் குளித்துக் கொண்டே பைக்கில் சென்றவாறு வீடியோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
@DGPMaharashtra @ThaneCityPolice
— WeDeserveBetterGovt.🇮🇳 (@ItsAamAadmi) May 15, 2023
This is ulhasnagar, Is such nonsense allowed in name of entertainment? This happened on busy Ulhasnagar Sec-17 main signal.Request to take strict action lncluding deletion of social media contents to avoid others doing more nonsense in public. pic.twitter.com/BcleC95cxa
ஆனால் இதற்கு காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சாலை விதிகளை மீறி பைக்கில் சென்றவாறு குளித்துக்கொண்டு பிறருக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் உல்ஹஸ்நகரில் உள்ள சிக்னலில் ஸ்கூட்டரில் வந்த ஆண் மற்றும் பெண் நடுரோட்டில் குளித்தவாறு பயணம் செய்தனர். ஆணும் பெண்ணும் ஸ்கூட்டரில் இருந்து கொண்டே தண்ணீரை தலையில் ஊற்றி குளித்துக் கொண்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ பரவிய நிலையி, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். ஸ்கூட்டர் எண்ணை அடிப்படையாக கொண்டு அதன் உரிமையாளர் மீது அபாராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!