பேருந்து நிலையத்தில் இளம்பெண் குத்தி கொலை... பகீர் சிசிடிவி காட்சிகள்....!!
திருப்பூர் காமராஜர் சாலையில் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் பயணிகள் கூட்டம் அதிகம் கானப்படுவது வழக்கம். நவம்பர் 1 ம் தேதி இரவு 10 மணிக்கு கோவில் வழி பகுதியில் வசித்து வரும் சாந்தி என்பவர் மினி பேருந்து நிற்கும் இடத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிலையத்திற்கு வந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாந்தியின் பின்புற கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதனால் அந்த பெண் வலியால் அலறி துடித்துள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பெண்ணை கொலை செய்யும் நோக்கத்தில் கத்தியால் குத்திய கணேசனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பேருந்து நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்திக்கொலை.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி!#Tirupur #murder #CCTV pic.twitter.com/onPpTjdhFC
— A1 (@Rukmang30340218) November 6, 2023
மேலும் அங்கு ரத்த வெள்ளத்தில் மிதந்த சாந்தியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சாந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து பெண்ணை கத்தியால் குத்திய நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் வசித்து வரும் கணேசன் என்பதும், ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வரும் இவர் திருமணமாகாத நிலையில், பழனிக்கு சென்ற போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பவளக்கொடி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சாந்தியை திருப்பூர் அடுத்த கோவில்வழி பகுதியில் குடியமர்த்திய கணேசன் ஒட்டன்சத்திரத்தில் பணியாற்றியபடி சாந்தியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை அறிந்த கணேசன் கடந்த 1-ம் தேதி இரவு திருப்பூருக்கு வந்துள்ளார்.அப்போது, பேருந்து நிலையத்தில் சாந்தி வேறு ஒரு நபருடன் பேசிக் கொண்டிருந்ததை கண்டதும் ஆத்திரமடைந்த கணேசன் காய்கறி வெட்டும் கத்தியால் சாந்தியின் தலை மற்றும் பின் முதுகு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சாந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!