சோகம்... இளம்பெண் என்ஜினீயர் தற்கொலை.. திருமணமான 6 மாதத்தில் சோகம்!

 
தற்கொலை

சென்னையை அடுத்துள்ள பள்ளிக்கரணையில், இளம் பெண் என்ஜினீயர், பல கனவுகளுடன் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணமான ஆறே மாதத்தில்  தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரியை அடுத்துள்ள விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் பாலசந்தர் (29). போரூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவருக்கும் சோழிங்கநல்லூரில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக பணிபுரியும் ராஜேஸ்வரிக்கும் (27) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் நிச்சயித்த நிலையில், திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவுப் பணிக்காக சென்ற பாலச்சந்தர் மனைவியை செல்போனில் அழைத்துள்ளார். நீண்ட நேரமாக தனது மனைவி ராஜலட்சுமி போனை எடுக்காத காரணத்தினால், சந்தேகமடைந்த பாலச்சந்தர், இது குறித்து தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் மலர்க்கொடி ஆகியோருக்கு மனைவி போனையை எடுக்காதது குறித்து தகவல் தெரிவித்தார்.

Dead-body

உடனடியாக இருவரும் வீட்டிற்கு விரைந்து சென்று நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் ராஜலட்சுமி  கதவைத் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ராஜலட்சுமி மின் விசிறி கொக்கியில் புடவையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்தார். 

இதனால் அதிர்ச்சியடைந்த மாமனார், மாமியார் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் ராஜலட்சுமி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Pallikaranai-PS

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது, குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 3 மாதங்களாக ராஜலட்சுமி தொடர்ந்து மனஉளைச்சலில் இருந்து வந்ததும், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் ராஜலட்சுமியின் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை எதுவும் காரணமாக இருக்குமா? என்ற கோணத்தில் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web