பயணிகள் ரயில் மோதி வாலிபரின் கை துண்டான துயரம்.. விழுப்புரத்தில் பரபரப்பு!

 
ரயில் விபத்து

விழுப்புரம் அருகிலுள்ள பானாம்பட்டை பகுதியில், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் தண்டவாளத்தைக் கடந்து சென்ற 23 வயது அசோக் என்ற வாலிபர் மீது பயணிகள் ரயில் மோதியதில் கை துண்டானது. இந்த சம்பவம் நேற்று மாலை 3:45 மணிக்கு நடந்தது என்று விழுப்புரம் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

ரயில் தண்டவாளம்

அசோக் தண்டவாளத்தின் அருகே இருந்த போது, புதுச்சேரி - திருப்பதி பாதையில் சென்றுக் கொட்னிருந்த பயணிகள் ரயில் அசோக் மீது திடீரென மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் அசோக் இடது கையை இழந்த நிலையில் மயங்கி விழுந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உடனடியாக அருகிலிருந்தவர்கள் அசோக்கை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம்

இது குறித்து போலீசார் இரண்டு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்: அசோக் தண்டவாளத்தில் தவறுதலாக இருந்தாரா? அல்லது தற்கொலை முயற்சியா என்று விசாரித்து வருகின்றனர். ரயில்வே அதிகாரிகள், தண்டவாள அருகில் பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!