ரத்த வெள்ளத்தில் இளைஞர்... பார் உரிமையாளருக்கு சரமாரியாக கத்திக்குத்து !

 
கத்திக்குத்து

இராமநாதபுரம் அருகே உள்ள சூரங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் 34 வயது  நிர்மல் .  இவர் கிருஷ்ணா நகர் பகுதியில் பார் வைத்து நடத்தி வருகிறார். இவரது பாரில் மது அருந்த வந்த ஆர்.எஸ்.மடை பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இவருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.இன்று  பிற்பகலில் நிர்மல் பாரிலிருந்து வீட்டிற்கு சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் 

போலீசார்

நயினார் கோவில் விலக்கு அருகே சென்ற போது  ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இறங்கி சரமரியாக வெட்டினர்.  இரத்த வெள்ளத்தில் கிடந்த நிர்மல் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

ராமநாதபுரம்

நிர்மல் மீது கொடூர தாக்குதல் நடத்திய நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நிர்மலின் உறவினர்கள்  அரசு மருத்துவமனை முன்பு திடீர்  சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது