தண்டவாளத்தில் தூங்கிய இளைஞர்கள்.. தட்டி தூக்கிய ரயில்.. ஒருவர் பலி.. இருவர் படுகாயம்!

 
தண்டவாளம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மணக்காட்டில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று இரவு வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் திருப்பூரில் இருந்து வந்திருந்த குமாரசாரதி (வயது 18), துளசி நாராயணன் (18), பிரபாகரன் (18) ஆகியோர் அங்குள்ள உறவினர் வீட்டில் வந்து தங்கியுள்ளனர்.

ரயில் தண்டவாளம் நடைமேடை ப்ளாட்ஃபாரம்

திருவிழாவை பார்த்துவிட்டு மூவரும் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தூங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாலை 5 மணியளவில் திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியன்பள்ளி நோக்கி சென்ற பயணிகள் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த 3 பேர் மீது பாய்ந்தது.

ரயிலில் அடிபட்ட குமாரசாரதி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த துளசி நாராயணன், பிரபாகரன் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட குமாரசாரதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web