லாரி மீது மோதி சம்பவ இடத்திலேயே 2 இளைஞர்கள் பலி!

 
மோதிய லாரி

புதுச்சத்திரம் மேம்பாலத்தில் பஞ்சர் ஆகி நின்றிருந்த டாரஸ் லாரி மீது மினி லாரி மோதி சம்பவ இடத்திலேயே 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 
கடலூர் அருகே உள்ள  புதுச்சத்திரம்  மேம்பாலத்தில் இன்று(ஜூலை..6) காலை, டயர் பஞ்சர் ஆகி டாரஸ் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்பொழுது திண்டிவனத்தில் இருந்து காரைக்காலை நோக்கிச் சென்ற மின் லாரி எதிர் எதிர்பாராத விதமாக பஞ்சர் ஆகி நின்றிருந்த தாரசிலாவின் மீது மோதியது . இதில் மினி லாரியை ஓட்டி வந்த காரைக்கால் சேமியான் குளம் பகுதியைச் சேர்ந்த அன்வர் மகன் சையத் முகமது(25 )  மற்றும் அவருடன் வந்த காரைக்கால் மீராபள்ளி தோட்டம் பகுதியைச் சேர்ந்த மஜீத் மகன்முகமது ரியாஸ் (20) ஆகிய சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புது சத்திரம் போலீசார்  சம்பவ இடத்துக்குச் சென்று 2 உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  கடலூர் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web