பாம்பை உடம்பில் சுற்றுக்கொள்ளும் இளைஞர்கள்.. 300 ஆண்டுகளாக நடைபெறும் வினோத திருவிழா!

 
 பாம்பு திருவிழா

பாம்புகளை தெய்வங்களாக வழிபடும் இந்தியாவின் பல்வேறு பக்தி சடங்குகளில் பீகாரின் பாம்பு திருவிழா ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்த விழா பொதுவாக நாக பஞ்சமியின் போது நடைபெறும். இத்திருவிழாவில் மக்கள் பக்தியுடன் பாம்புகளை கையிலும் கழுத்திலும் கட்டிப்பிடிக்கும் சடங்கு 300 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

நகைச்சுவையாகவும், ஆச்சரியமாகவும் காணப்படும் இவ்விழாவின் தனிச்சிறப்பு என்னவென்றால், பூசாரி ஆற்றில் நீராடி, பாம்புகளை எடுத்து வந்து பக்தர்கள் மீது வீசுகிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த பாம்புகளை தங்கள் உடலில் சுமந்து சென்று வழிபடுவது குறிப்பிடத்தக்கது. மக்களின் நம்பிக்கையின்படி, பாம்புகளை வணங்குவது அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அதிர்ஷ்டத்தையும் தருகிறது.

இந்த பாம்பு திருவிழா மக்களை மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் கவர்ந்து வருகிறது. பல பாம்பு போட்டிகளும் இதன் தனிச்சிறப்புகளாகும். இவ்விழாவில் கலந்துகொள்பவர்கள் பாம்புகளுடன் அன்றாட வாழ்வில் பாசத்தையும் நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்வார்கள்.சமீபத்தில், இந்த பாம்பு திருவிழாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 11 வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த வீடியோ 5.25 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதனால் பாம்பு திருவிழா மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!