’நீ கருப்பா இருக்க’.. குழந்தை பெற்ற கையோடு கணவனை பிரிந்து சென்ற மனைவி!

 
கணவன் மனைவி சண்டை

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் விஷால் மோகியா (24). இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. விஷால் மோகியா , கருப்பு நிறத்தில் இருப்பதால், திருமணமானதில் இருந்து அவரது மனைவி கிண்டல் செய்து வருகிறார். மேலும், அவருடன் அடிக்கடி நிறம் காரணமாக சண்டையிட்டுள்ளார். இந்நிலையில், விஷால் மோகியாவின் மனைவிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

திருமணம்

இந்நிலையில் அந்த பெண் குழந்தையை கணவனிடம் விட்டுவிட்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். விஷால் மோகியா தனது மனைவியை அழைத்து வர அவரது வீட்டுக்குச் சென்றபோது, ​​நிறப் பிரச்சினையைக் காரணம் காட்டி கணவருடன் செல்ல மறுத்துவிட்டார். இதையடுத்து விஷால் மோகியா தனது தாயுடன் சென்று மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

போலீஸ்

அதில், தான் கறுப்பாக இருப்பதால் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இருவரையும் சனிக்கிழமை அழைத்து ஆலோசனை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். திருமணமாகி குழந்தை பெற்ற நிலையில், நிறத்தின் காரணமாக கணவன்-மனைவி பிரிந்த விவகாரம் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web