கல்யாணம் கூட ஆகலயே... மின்னல் தாக்கி இளைஞர் உடல் கருகி பலி... கதறித் துடித்த பெற்றோர்... !!

 
ஜெயக்குமார்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பல்லபுரம் மாமரத்து கொள்ளை பகுதியில் வசித்து வருபவர்  ஜெயபால். இவரது மகன் ஜெயக்குமார். இவர் லால்குடி அருகே குமுளூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. நேற்று மாலை முதல் லால்குடி பகுதியில் இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்தது. 
 மின்னல் பலி
இந்நிலையில் வீட்டில் இருந்த ஜெயக்குமார், ப்ளூடூத் மூலம் தனது செல்போனில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஜெயக்குமார் மீது இடி மின்னல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த ஜெயக்குமார் அங்கேயே மயங்கி விழுந்தார். 

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 
 ஆம்புலன்ஸ்
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த லால்குடி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web