இளைஞர் விஷம் குடித்து தற்கொலை... கடனை கட்ட நிதி நிறுவனம் நெருக்கடியால் சோகம்!

 
மதுலிகா

விழுப்புரம் மாவட்டம் மயிலம்  புது காலனி பகுதியில் வசித்து வருபவர் 25 வயது  அருண்குமார்  .  இவர் 19 வயது மதுலிகாவை  திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. அருண்குமார், விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
 விஷம்
நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியவர்களிடம் இருந்து பணம் வசூலிக்கும் பணி அருண்குமாருக்கு ஒதுக்கப்பட்டது. ஜூன் 1ம் தேதி அருண்குமாரிடம், கடன் வாங்கியவர்களிடம் இருந்து பணத்தை வசூலித்து கட்ட வேண்டும் என நிதி நிறுவனத்தின் மேலாளர் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.இதில் மன உளைச்சலில் இருந்த அருண்குமாா், அன்று மாலையிலேயே பேரணி பகுதியில் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு அருண்குமாா் பரிதாபமாக உயிரிழந்தாா்.

ஆம்புலன்ஸ்
 இதுகுறித்து  காவல் நிலையத்தில் அருண்குமார் மனைவி மதுலிகா புகார் அளித்தார். அதில் எனது கணவர் சாவுக்கு காரணமான நிதி நிறுவன மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web