கடன் பிரச்சனையால் விஷம் குடித்து இளைஞர் தற்கொலை!

 
விஷம்

கோவில்பட்டி அருகே கடன் பிரச்சனையால் விஷம் குடித்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே புளியங்குளம் மேல தெருவைச் சேர்ந்தவர் வேல்சாமி. இவருடைய மகன் பேச்சிமுத்து (42). கட்டிட தொழிலாளியான இவர் அதே பகுதியில் புதிய வீடு கட்டுவதற்கு பலரிடம் கடன் வாங்கி இருந்தார்.

பள்ளி மானவி தற்கொலை

பின்னர் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். கடன்தொல்லையால் மனமுடைந்த பேச்சிமுத்து கடந்த சில நாட்களாக சரிவர வேலைக்கு செல்லவில்லை. 

அவர் நேற்று முன்தினம் திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தார். இதைக் கண்ட உறவினர்கள் உடனே அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

மருமகனை விஷம் வைத்து கொலை செய்த மாமியார்!! பர பர வாக்குமூலம்!!

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது