மக்களே உஷார்... செல்போன் சார்ஜ் போடும் போது மின்சாரம் இளைஞர் உயிரிழப்பு!

சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர் அருகே நேற்றிரவு தனது செல்போனிற்கு சார்ஜ் போட முயன்ற போது, மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு முன்பாக இளம்பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் சென்னை மருத்துவ கல்லூரிக்கு பயிற்சிக்காக வந்திருந்த போது, தங்கியிருந்த அறையில் சார்ஜ் போட முயன்றதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மின் சாதனங்களைப் பயன்படுத்தும் போது ரொம்பவே எச்சரிக்கையுடன் பயன்படுத்துங்க.
தஞ்சாவூர் மாவட்டம், சுழிவலம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (29). கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை குன்றத்தூர், சுப்புலெட்சுமி நகர், ஒன்றிய காலனியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு வழக்கம் போல் பணி முடிந்ததும் மது போதையில் வீட்டிற்கு சென்ற பாலமுருகன், தனது செல்போனுக்கு சார்ஜ் போட முயன்ற நிலையில், எதிர்பாராதவிதமாக செல்போன் சார்ஜரில் மின் கசிவு ஏற்பட்டு, பாலமுருகன் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பாலமுருகனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தபோது மின்சாரம் தாக்கி பாலமுருகன் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து உடனடியாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பாலமுருகனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!