பகீர் வீடியோ... ஓடும் ரயிலில் இளைஞர் மின்சாரம் தாக்கி பலி... ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!

 
ரயிலில் மீது இளைஞர்

 இன்றைய  இளசுகள் ரீல்ஸ் மோகத்தில் உயிரை பணயம் வைத்துபல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து வீடியோவாக்கி வருகின்றனர். இதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பணம் பண்ணவும், லைக்ஸ் , ஷேர்ஸ் அள்ளவும் குறியாக  உள்ளனர். இது குறித்து எத்தனையோ எச்சரிக்கை பதிவுகள் வந்தபின்னும்  இளைஞர்கள் இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்வதே இல்லை எனலாம்.  

இவர்களின் சாகசம் சிலநேரம் பலரின் உயிரையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.எப்போதும் தங்களின் கையில் வைத்துள்ள செல்போன் உலகம் மூலம் பார்வையாளர்களை  கவர பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவை சிலநேரம் அவர்களின் உயிருக்கே கூட ஆபத்தை விளைவித்து விடுகின்றன.  
இந்நிலையில் ரயில் பயணத்தின்போது இளைஞர் ஒருவர் மின்சார ரயிலின் பக்கவாட்டு பகுதி வழியே மேலே இருக்கிறார்.

அங்கு ஓடும் ரயிலில் இருந்தவாறு சாகசம் காண்பித்த இளைஞர், நொடியில் மின்சாரம் தாக்கி பலியாகிறார்.  இந்த சம்பவம் எங்கு? நடைபெற்றது என்ற விபரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து  ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web