கார் ஏற்றி இளைஞர் கொலை... பெரும் பரபரப்பு!
மதுரை மாவட்டம் மேலூர் பூதமங்கலத்தில் வசித்து வருபவர் 21 வயது சதீஷ்குமார். இவர் தும்பைபட்டி 24 வயது ராகவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராகவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில், கணவரை இழந்த ராகவியை சதீஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருச்சியில் வசித்து வந்த சதீஷுக்கு ராகவியை விட வயது குறைவு என்பதால் இவர்களின் திருமணத்திற்கு ராகவியின் பெற்றோர், உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து வீட்டில் இருந்த நகையை எடுத்துச் சென்று விட்டதாக ராகவி மீது பெற்றோர் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் இரு தரப்பினரிடமும் நடத்திய விசாரணையில் நள்ளிரவு 11:30 மணி வரை விசாரணை தொடர்ந்தது. இதனையடுத்து இவர்கள் இரு தரப்பினரையும் போலீசார் நாளை (அதாவது இன்று) விசாரணைக்கு வரும்படி அனுப்பி வைத்தனர். இதையடுத்து சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் மனைவி ராகவியை அழைத்துச் சென்றார்.

ராகவியின் உறவினர்கள் பின்னால் காரில் சென்று இருசக்கர வாகனம் மீது மோதியதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். மனைவி ராகவி படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று சதீஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராகவியும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
