அதிர்ச்சி... நடிகை நந்திதா முன்னே இளைஞர் சுயஇன்பம்.. வீடியோ வெளியிட்டு போலீசில் புகார்!

 
நந்திதா சங்கரா

நாடு முழுவதும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கும் நிலையில், கேரளாவில் ஓடும் பேருந்தில் நடிகை ஒருவருக்கு நடைபெற்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவின் திருச்சூரில் இருந்து கொச்சி நோக்கி சென்றுக்கொண்டிருந்த பேருந்தில், நடிகையும், மாடல் அழகியுமான நந்திதா சங்கரா பயணம் செய்துக் கொண்டிருந்தார். மூன்று பேர் அமரும் வகையிலான இருக்கையில் நந்திதா சங்கரா அமர்ந்து கொண்டுள்ளார். மற்றொரு ஓரத்தில் இன்னொரு பெண்ணும் அமர்ந்திருந்தனர். நடுவில் உள்ள இடம் காலியாக இருந்துள்ளது. அப்போது கோழிக்கோட்டைச் சேர்ந்த சவாத் ஷா என்ற நபர் இளைஞர் அந்த பேருந்தில் ஏறியுள்ளார். 

பேருந்தில் ஏறிய அவர் நேராக நந்திதாவுக்கும், மற்றொரு பெண்ணுக்கும் நடுவில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து பயணித்துள்ளார். அந்த நபர் ஜன்னல் அருகே அமர்ந்திருந்த நந்திதாவிடம், அவர் எங்கே செல்கிறார் உள்ளிட்ட தகவல்களை கேட்டுள்ளார். 

அந்த பெண்ணிடம் பேசிக் கொண்டு இருக்கும் அதே நேரத்தில், சவாத் ஷா ஒரு கையால் நந்திதாவின் இடுப்பை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இன்னொரு கையை தன்னுடைய பிறப்புறுப்பு மீது வைத்துக் கொண்டு ஆபாச செய்கையில் ஈடுபட்டுள்ளார். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நந்திதா, இருக்கையில் சிறிது நகர்ந்து அமர்ந்துள்ளார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அந்த நபர் தனது கட்டுப்பாட்டை இழந்து இரு பெண்கள் நடுவே சுய இன்பத்தில் ஈடுபட தொடங்கினார். இது நந்திதாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. உடனடியாக தனது போனை எடுத்து அந்த நபரை வீடியோ எடுத்து ஆதாரம் கிடைத்தவுடன், நந்திதா கூச்சலிட்டு வாக்குவாதம் செய்துள்ளார். 

உடனே கண்டக்டரிம் நந்திதா புகாரளிக்க, பேருந்தில் பயணித்த பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை கைமீறி செல்வதற்குள் ஓட்டுநர் நேராக நெடுவாசல் காவல் நிலையத்திற்கு பேருந்தை ஓட்டிச் சென்றார். கீழே இறக்கப்பட்ட சவாத் ஷா கண்டக்டரை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பியோடினார். 

நந்திதா சங்கரா

இதனையடுத்து பேருந்தில் பயணித்த சக பயணிகள் விரைந்து சென்று சவாத் ஷாவை துரத்திச் சென்று பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவை அனைத்தையும் நந்திதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். மேலும் கண்டக்டர், டிரைவர், புகார் அளிக்க உதவிய ஒரு சட்டக்கல்லூரி மாணவி மற்றும் பேருந்தில் இருந்த மற்ற பயணிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். 

அதே போல் அந்த நபர் அடுத்த முறை ஜிப்பைத் திறக்கும் போது என் முகத்தை நினைத்துப் பயப்பட வேண்டும் என காட்டமாகவும் நந்திதா தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 
 

From around the web