ஷாக் வீடியோ... மின்கம்பத்தின் மீது ஏறிப்படுத்த இளைஞர்... போதையில் பயங்கரம்!

 
ஆந்திரா

 ஆந்திர மாநிலத்தில் சிங்கிபுரம்  கிராமத்தில் வசித்து வரும் இளைஞர்  தன் தாயிடம் ஓய்வூதிய பணத்தை கேட்டுள்ளார். இவர் குடிப்பதற்காக பணம் கேட்டதால் அவரது தாய் மறுத்துவிட்டார். இதனால் தாயை பயமுறுத்த நினைத்த இளைஞர் ஷாக்கான சம்பவம் ஒன்றை செய்து அனைவரையும் அலற வைத்தார்.  


இதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தின் மீது ஏறி மின் வயரில் படுத்துக்கொண்டார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்துவிட்டு உடனே மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து சிறிது நேரம் கழித்து அந்த இளைஞர்   கீழே இறங்கி வந்தார். மேலும் குடிபோதையில் அந்த இளைஞர் மின் கம்பத்தில் ஏறி படுத்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!