ஆடு திருடிய வாலிபர்கள் கைது... கார் பறிமுதல்!

 
இனி ஆடு, மாடு சாலைகளில் சுற்றி திரிந்தால் ரூ 10000 அபராதம்!!
 

தூத்துக்குடியில் ஆடுகளை திருடிய 2பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார் பறிமுதல் மற்றும் ரூ.75ஆயிரம் பணம் செய்யப்பட்டது.  தூத்துக்குடி திரவியரத்தின நகர் முருகேசன் நகர் அதை சுற்றி உள்ள பகுதியில் ஆடுகள் அடிக்கடி திருட்டுப் போய் வந்தது இதில் 11 ஆடுகள் திருட்டு போனதாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில்  சப் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் கொண்ட தனிப்படை போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். 

ஆடு

விசாரணையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  வைரவபுரம் நேரு நகரை சேர்ந்த நாசர் மகன்  அராபத் (29), புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோபாலசமுத்திரம் அந்தோணி மகன் மோசஸ் மனோகரன் (26) ஆகிய 2 பேருமட் ஆடுகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆடுகள் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கார் கைப்பற்றப்பட்டது. 

போலீஸ்

மேலும் 11 ஆடுகளை திருடி விற்பனை செய்த பணம் ரூபாய் 75 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பின் கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் கோர்ட்டில் ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் கைது செய்யப்பட்ட அராபத் மீது ஒரு கொலை வழக்கும் 13 ஆடு திருட்டு வழக்குகளும் உள்ளன, மோசஸ் மனோகரன் மீது அடிதடி ஆடு திருட்டு உள்பட 7 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?