வீடியோ எடுக்க மொபைல் டவரில் ஏறிய யூ-ட்யூபர்... கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு!

 
நீலேஷ்வர்
லைக்ஸ்களுக்காகவும், ஷேர்களுக்காகவும் உயிரைப் பணயம் வைத்து சாகசங்களில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் பரவும் வகையில் வீடியோ எடுக்க மொபைல் டவரின் மேல் ஏறி இறங்கிய இளைஞர் 5 மணி நேர பெரும் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். காவல்துறையினரும், தன்னார்வலர்களும் 5 மணி நேரம் முயற்சி செய்து யூ-ட்யூபர் நீலேஷ்வரை காயமின்றி மீட்டனர். உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் இச்சம்பவம் நடந்துள்ளது. 'நீலேஷ்வர்22' என்ற பெயரில் யூ-ட்யூப் சேனல் நடத்தி வந்த நீலேஷ்வர்  8,87,000 சந்தாதாரர்களை தனது சேனலுக்குப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், சாகச காட்சிகளைப் படமாக்கி வெளியிட்டால் அவரது சேனல் வைரலாகி விடும் என்று நினைத்தார் நீலேஷ்வர். இதற்கான யோசனையில், வைரலாகும் வகையில் வீடியோ பதிவிடுவதற்காக நீலேஷ்வர் தனது நண்பருடன் செல்போன் டவர் அருகே சென்றார். அதன் பின்னர் நீலேஷ்வர் செல்போன் டவரில் ஏறுவதையும் அவரது நண்பர் படம் பிடித்தார்.அதற்குள் நீலேஷ்வர் செல்போன் கோபுரத்தில் சிக்கினார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து செல்போன் கோபுரத்தின் அருகே சென்றனர். இதனால் வீடியோ எடுத்த நண்பர் அந்த பகுதியில் இருந்து தப்பியோடி விட்டார். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீலேஷ்வரை பத்திரமாக தரையிறக்க சுமார் ஐந்து மணி நேரம் ஆனது. அதே நேரத்தில், இந்த சம்பவம் குறித்து பேசிய போலீசார், ‘சமூக வலைதளங்களில் புகழுக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாக இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. இம்மாதம் 18ம் தேதி, ரீல்களை பதிவு செய்யும் போது கார் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி உயரத்தில் விழுந்ததில் இளம் யூ-ட்யூபர் ஒருவர் உயிரிழந்தார்.  மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள தத்தாத்ரேயா கோவிலுக்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.விபத்து தொடர்பான காட்சிகளும் வெளியாகின. ஓட்டுநர் சோதனைக்கான பயிற்சி வீடியோவை படமாக்க இளம் பெண்ணும் அவரது தோழியும் அங்கு வந்துள்ளனர். அந்த வீடியோவில், அந்த பெண் காரின் டிரைவிங் சீட்டில் இருப்பதைக் காணலாம். அவள் தோழியும் அவளை ரிவர்ஸ் எடுக்கச் சொல்வதைக் கேட்கலாம். காரை ரிவர்ஸ் ஏற்றிய போது வேகம் அதிகரித்து கட்டுப்பாட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web