மன்னிப்பு கோரிய யூ-ட்யூபர் இர்ஃபான்... கருணை காட்டாத அதிகாரிகள்!
இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தகவல் வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாக உள்ள நிலையில், பிறப்பதற்கு முன்பே குழந்தையின் பாலினத்தை வெளிப்படையாக அறிவித்து யூடியூபர் இர்ஃபான் வீடியோ வெளியிட்டது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார் இர்ஃபான்.

‘இர்ஃபான் வியூஸ்’ என்ற யூடியூப் சேனலில் உணவு விமர்சனம், பிரபலங்களுடன் வீடியோ பகிர்ந்து பிரபலமானவர் இர்ஃபான். கடந்த ஆண்டு இவருக்குத் திருமணம் ஆன நிலையில் மனைவி கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் இவர் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் என்ன என்பது பற்றி துபாயில் டெஸ்ட் செய்து தெரிந்து கொண்டார். இதுமட்டுமல்லாது, இந்த விஷயத்தை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பார்ட்டி வைத்து கொண்டாடி அதை அறிவித்தார்.
இதனை யூடியூபில் வீடியோவாகவும் வெளியிட்டார். இந்த விஷயம் சர்ச்சையை கிளப்ப அவருக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை வாட்ஸப் மற்றும் இமெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு பரிந்துரை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த சர்ச்சையை அடுத்து இர்ஃபான் அந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கினார். மேலும், தன்னைத் தொடர்பு கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வாட்ஸப் மற்றும் இமெயில் மூலம் தனது செயலுக்கு இர்ஃபான் மன்னிப்பு கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு தனது யூ-ட்யூப் பக்கத்தில் பகிரங்கமாக வீடியோ மூலமாக மன்னிப்பு கேட்கவும் தயாராக இருப்பதாக இர்ஃபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மன்னிப்பு கோரினாலும் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் கறார் காட்டியுள்ளனர். இந்திய சட்டப்படி பிறக்க இருக்கும் குழந்தையின் பாலினத்தை கருவிலேயே அறிந்து கொள்வது குற்றமாகும். அப்படி, பாலினத்தை கண்டறிந்து சொல்லும் நபர்கள் மீது தமிழகத்தில் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
