யூ-ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு!

 
சவுக்கு சங்கர்

பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கர்  கஞ்சா வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த மே மாதம் 8ம் தேதி சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 20ம் தேதி அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு செய்திருந்தது. போலீசார், சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரித்த நிலையில், சவுக்கு சங்கருக்கு ஜூன் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் நேற்றுடன் நீதிமன்றக்காவல் நிறைவடைவதைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சவுக்கு சங்கருக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web