எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பிரிவு பாதுகாப்பு!

மத்திய உள்துறை அமைச்சகம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது. ஏற்கனவே Y பிளஸ் பாதுகாப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, தற்போது Z பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜூலை 7 முதல் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அடிக்கடி ஈபிஎஸ் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், அதிமுகவினரின் கோரிக்கையை ஏற்று Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. Z+ பிரதமருக்கு அடுத்தபடியான உயர்ரக பாதுகாப்பு என்பது குறிப்பிடதக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!