சொமேட்டோவின் அசத்தல் அப்டேட்.. பெண் ஊழியருக்கு இன்பதிர்ச்சி கொடுத்து அசத்திய சி.ஏ.ஓ!
இந்தியாவின் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி தளமான Zomato, அன்னையர் தினத்தன்று "ஃபோட்டோ கேக்" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் புகைப்படங்களை தங்கள் விருப்பப்படி பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த புதிய அம்சத்தை Zomato நிறுவனத்தின் CEO தீபிந்தர் கோயல் அறிமுகப்படுத்தியுள்ளார்.
A more light hearted update for today – we just launched Photo Cakes on @zomato – now you can upload your picture and get a customized cake delivered in about 30 minutes.
— Deepinder Goyal (@deepigoyal) May 9, 2024
Tested the feature myself to congratulate Aashna on completing 10 yrs at @zomato. She joined Zomato a few… pic.twitter.com/wmgb5gO7bA
இதையடுத்து, ஆர்டர் செய்யப்பட்ட கேக் அரை மணி நேரத்தில் பயனாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அன்னையர் தினத்தன்று "ஃபோட்டோ கேக்" வசதியைப் பயன்படுத்தி நிமிடத்திற்கு 150 கேக்குகள் ஆர்டர் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சொமாடோ நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரின் 10வது ஆண்டு நிறைவையொட்டி, “போட்டோ கேக்” தயாரித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சொமாட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. மேலும் அவரே அந்த ஊழியருக்கு கேக்கை வழங்கினார். இந்நிலையில், சோமாட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: “சோமாடோவில் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள ஆஷ்னாவை வாழ்த்துவதற்காக, “ஃபோட்டோ கேக்” என்ற புதிய அம்சத்தை அவருக்குப் பரிசளித்தோம். அவர் தனது 20வது வயதில் சோமாடோவில் சேர்ந்தார். இப்போது Zomatoவில் HR குழுவின் இணைத் தலைவராக உள்ளார். அன்னையர் தினத்திற்காக இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த எங்களுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றிய எங்கள் உணவக உரிமையாளர்களுக்கு ஒரு பெரிய நன்றி” இவ்வாறு அவர் கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!